தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை
உங்கள் பிள்ளைகள் தொடர்பில் இனந்தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படும். சமூக ஊடகங்களின் ஊடாகவும் சிறுவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த சிறுவர்களின் தகவல்களை சேகரித்து சிலநபர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஷனிகா மலல்கொட தெரிவித்துள்ளார்.
அதிகாரசபையில் 11-12-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பாதிப்படைந்த சிறுவர்கள் அனர்த்த முகாம்களில் மற்றும் உறவீனர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பற்றிய கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிறுவர்கள் பற்றிய தகவல்களை கோருகின்றனர்.
இந்த அனர்த்தங்களினால் வீடுகளையும், பெற்றோர்களையும் இழந்த சிறுவர்கள் அதிகளவான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிகளை வழங்குவதாக கூறி சிறுவர்கள் பற்றிய தகவல்களை கோருகின்றனர்.
உங்கள் பிள்ளைகள் தொடர்பில் இனந்தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படும். சமூக ஊடகங்களின் ஊடாகவும் சிறுவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே சிறுவர்களின் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் பராமரிப்பு தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சபை மற்றும் சிறுவர்கள் நன்னடத்தை நிலையங்களில் தகவல்களை வழங்க முடியும்.
சிறுவர்ககளின் பாதுகாப்பு பெற்றோரிடம் அல்லது பொருத்தமான நம்பிக்கைக்குரிய நபரிடம் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் 1929 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றார்.





