கமேனியின் மறைவுக்கு ரிஷாத் அனுதாபம்
ஈரானின் உயர் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளார்.
ஏகாதிபத்தியவாதிகளான அமெரிக்கா – இஸ்ரேல் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உயர் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு 05-03-2026 அன்று விஜயம் மேற்கொண்ட ரிஷாத் பதியுதீன் அங்குள்ள தூதுவர் அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரிக்கார் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரான அஷ்ரப் தாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.





