மரிக்கார் எம்.பி.அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும், அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்.
ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்.பொலிஸார் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் 28-12-2025 அன்று நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஊடகங்களுக்கு எதிராக செயற்படுகிறது. அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசாங்கத்துக்கு கிடையாது.
ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும், அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்.
ஊடகத்துக்கு எதிராக பொலிஸார் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கும் நிலைமை இன்று காணப்படுகிறது. ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் பொலிஸார் ஊடகத்துறை அமைச்சிடம் முறைப்பாடளிக்க வேண்டும். பொலிஸார் அரசாங்கத்தின் நோக்கத்துக்கமைய ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றனர்.





