அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் கொழும்பு துறைமுகத்துக்கு களவிஜயம்
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்கவுடன் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர் கொழும்புத் துறைமுகத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
நாட்டுக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர், கொழும்புத் துறைமுகத்துக்குக் களவிஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களிலும், களவிஜயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஓரங்கமாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்கவுடன் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர் கொழும்புத் துறைமுகத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது அமெரிக்க - இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் இருநாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியவாறான வாய்ப்புக்களை இனங்காணல் என்பன தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.





