நூற்றாண்டு பழமையான லண்டன் விகாரையில் நமல் எம்.பி வழிபாடு
நாமல் ராஜபக்ஷ நாளை மறுதினம் கேம்பிரிட்ஜ் யூனியனில் விசேட உரையாற்றுவதற்கு ஆரம்பத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
லண்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ 100 வருடம் பழமை வாய்ந்த லண்டன் பௌத்த விகாரைக்கு சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ்பெரி விகாரைக்கு சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதுடன், நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
நாமல் ராஜபக்ஷ நாளை மறுதினம் கேம்பிரிட்ஜ் யூனியனில் விசேட உரையாற்றுவதற்கு ஆரம்பத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நிரல் இரத்துச் செய்யப்பட்டது.
ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ள நிலையில், இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.





