இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் அமர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை அரசாங்கத்துக்கும் மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டில் திட்டவட்டமான உழைப்பு சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணி, விவசாயம், கட்டுமானம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் சேவைகள், உற்பத்தி மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற துறைகளில் காணப்படுகின்ற தொழில்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்குரிய நடைமுறைத் திட்டங்களில் அவ்வப்போது கையொப்பமிடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலின் வணிக மற்றம் சேவைத் துறைகளிலுள்ள தொழில்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு இஸ்ரேல் அரசு உத்தியோகபூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அத்துறைகளிலுள்ள தொழில்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை தொழிலில் அமர்த்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் இருதரப்பினருக்கிடையில் தற்போது கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் 'G' பணிச்சட்டகத்தின் கீழ் கையொப்பமிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சரவைக்குத் தெளிவூட்டியதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.





