வேலையாட்களின் குறைந்தபட்ச வேதன சட்டமூலம் நிறைவேறியது
இதன்போது சபையில் இருந்த சகலரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி எவரும் அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை.

வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் 182 வாக்குகளால் நிறைவேறியது.
பாராளுமன்றத்தில் 22-07-2025அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து அதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது சபையில் இருந்த சகலரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி எவரும் அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை. எனினும் 42 பேர் சமூகமளித்திருக்கவில்லை.
இதற்கமைய 182 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த புதிய திருத்தச் சட்டதிற்கமைய ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் 30000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.