பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்: சாணக்கியன் எம்.பி
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பல ஆண்டுகாலமாக அரச அதிகாரிகளின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளது.

பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு இறுதி பகுதியில் நடத்தலாம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 19-08-2025அன்றுநடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பல ஆண்டுகாலமாக அரச அதிகாரிகளின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளது.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குவது முறையற்றது.இதனால் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.இந்த பிரேரணையை அரசாங்க பிரேரணையாக கருதி பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்படும் என்று சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு இறுதி பகுதியில் நடத்தலாம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.ஆகவே மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். என்றார்.
இதற்கு எழுந்து பதில மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன எந்த தேர்தலையும் பிற்போட வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. அரச நிர்வாக கட்டமைப்புக்கு அமையாகவே மாகாண சபைகள் இயங்குகின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வரை மாகாண சபைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருக்க முடியாது. ஆகவே தீர்வுகாண நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என்றார்.