Breaking News
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவராக ராஜீவ் அமரசூரிய நியமனம்
2025 பெப்ரவரி 19 இல் நடைபெற்ற தேர்தலில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய சனியன்று (29) பதவியேற்றுக் கொண்டார்.
2025 பெப்ரவரி 19 இல் நடைபெற்ற தேர்தலில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமரசூரிய முன்னர் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார். இவர் விரிவான மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்குரைஞர் தொழில் செய்துள்ளார். இவர் பொது சட்டம் மற்றும் ஒப்பந்த, வணிக, சொத்து, வரிவிதிப்பு மற்றும் வங்கிச் சட்டம் உள்ளிட்ட உரிமையியல் வழக்குகளின் பல்வேறு கிளைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.