கட்டார் அமீரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
மறைந்த தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானி அவர்களின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் அமீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டார் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் ஹரினி அமரசூரிய, 17-08-2026 அன்று டோகாவில் உள்ள லுசைல் அரண்மனைக்கு சென்றிருந்தார்.
அவரை கட்டார் நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் கலீபா பின் ஹமத் பின் கலீபா அல் தானி வரவேற்றார். பின்னர் அவர், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்தார்.
மறைந்த தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானி அவர்களின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய இரங்கல் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கட்டார் அமீரின் துணை அமீர் ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல்-தானி, பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, ஷூரா கவுன்சிலின் சபாநாயகர் ஹசன் பின் அப்துல்லா அல்-கானிம், அரச குடும்பத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், மறைந்த முன்னாள் அமீரின் மகன்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.