பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவை மாற்றியமையுங்கள்: ஐ.நா.
புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், இல்லாவிடின் அதன் பிரயோகத்தை இடைநிறுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்புதிய வரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியும், பரிந்துரைகளை உள்ளடக்கியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளினால் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அமைவாக சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவான பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வரவேற்கிறோம். அதேபோன்று பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் வழங்குகின்ற வாக்குமூலத்தை சாட்சியமாகக் கருதமுடியும் என்ற விடயம் நீக்கப்பட்டிருப்பது உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் சில முன்னேற்றகரமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலமைப்பு என்பவற்றின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு முரணான பல விடயங்கள் இந்த வரைவில் உள்ளடங்கியிருப்பதுடன், அவை தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் நிகழும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. இப்புதிய வரைவானது ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தில் இருப்பதாக அடையாளங்காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் அவற்றின் மேலும் விரிவுபடுத்தப்பட்ட கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. அதன் விளைவாக, 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தின் காரணமாக தீவிர குற்றமாக்கப்படல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதுடன் சிவில் இடைவெளி சுருங்குதல், வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய அதிகாரங்கள், முறையான நீதிமன்ற மேற்பார்வையின்றி ஒருவரை வலுகட்டாயமாக கைது செய்வதற்கும், நீண்டகாலம் தடுத்து வைப்பதற்குமான அதிகாரம் அளிக்கப்படல், கைது செய்யப்படும் சந்தேகநபர் சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் ஏனைய முறையற்ற கையாளுகைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடு, உரியவாறான வழக்கு விசாரணை செயன்முறை மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு புதிய கரிசனைகள் எழுந்துள்ளன. எனவே இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டக்கட்டமைப்பானது சர்வதேச சட்டக்கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளத்திருத்தியமைப்பது அவசியமாகும். ஆகவே புதிதாக முன்மொழியப்பட்ட வரைவை மாற்றியமைக்குமாறும், அவ்வரைவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் உள்வாங்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மற்றும் ஏனைய சகல தரப்பினருடனும் செயற்திறன்மிக்க பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். மேலும் அரசாங்கம் தொடர்ந்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகித்துவரும் நிலையில், அதனை முழுமையாக நீக்குமாறு அல்லது அதன் பிரயோகத்தை இடைநிறுத்துமாறு கோருகிறோம் என்றுள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், இல்லாவிடின் அதன் பிரயோகத்தை இடைநிறுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்புதிய வரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியும், பரிந்துரைகளை உள்ளடக்கியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளினால் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அமைவாக சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவான பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வரவேற்கிறோம். அதேபோன்று பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் வழங்குகின்ற வாக்குமூலத்தை சாட்சியமாகக் கருதமுடியும் என்ற விடயம் நீக்கப்பட்டிருப்பது உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் சில முன்னேற்றகரமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலமைப்பு என்பவற்றின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு முரணான பல விடயங்கள் இந்த வரைவில் உள்ளடங்கியிருப்பதுடன், அவை தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் நிகழும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.
இப்புதிய வரைவானது ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தில் இருப்பதாக அடையாளங்காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் அவற்றின் மேலும் விரிவுபடுத்தப்பட்ட கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. அதன் விளைவாக, 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தின் காரணமாக தீவிர குற்றமாக்கப்படல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதுடன் சிவில் இடைவெளி சுருங்குதல், வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய அதிகாரங்கள், முறையான நீதிமன்ற மேற்பார்வையின்றி ஒருவரை வலுகட்டாயமாக கைது செய்வதற்கும், நீண்டகாலம் தடுத்து வைப்பதற்குமான அதிகாரம் அளிக்கப்படல், கைது செய்யப்படும் சந்தேகநபர் சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் ஏனைய முறையற்ற கையாளுகைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடு, உரியவாறான வழக்கு விசாரணை செயன்முறை மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு புதிய கரிசனைகள் எழுந்துள்ளன.
எனவே இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட கட்டமைப்பானது சர்வதேச சட்டக்கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளத்திருத்தியமைப்பது அவசியமாகும்.
ஆகவே புதிதாக முன்மொழியப்பட்ட வரைவை மாற்றியமைக்குமாறும், அவ்வரைவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் உள்வாங்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மற்றும் ஏனைய சகல தரப்பினருடனும் செயற்திறன்மிக்க பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
மேலும் அரசாங்கம் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பிரயோகித்துவரும் நிலையில், அதனை முழுமையாக நீக்குமாறு அல்லது அதன் பிரயோகத்தை இடைநிறுத்துமாறு கோருகிறோம் என்றுள்ளது.





