நாமல் ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரம் விசாரணை
கடந்த வாரம் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் இந்திய விஜயம் காரணமாக அவரால் ஆஜராக முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று அவர் இவ்வாறு கோட்டையில் உள்ள குற்றப் புலனயவு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் 03-02-2026 அன்று குற்றப் புலனயவு திணைக்களம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. நேற்று முற்பகல் 10.15 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
பாதாள உலக கும்பல் தலைவனான, இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்து அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்புகள் குறித்த விசாரணைகளுக்கு நாமல் ராஜபக்ஷ இவ்வாறு சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.
கடந்த வாரம் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் இந்திய விஜயம் காரணமாக அவரால் ஆஜராக முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று அவர் இவ்வாறு கோட்டையில் உள்ள குற்றப் புலனயவு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று முன் தினம் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று நாமலிடம் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷ வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.