Breaking News
போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் ஐதராபாத் காவல்துறையினரால் கைது
ஹைதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு துறை கண்டறிந்ததை அடுத்து, அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் மற்றும் 4 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு துறை கண்டறிந்ததை அடுத்து, அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறைக்குழு போதைப்பொருள் கடத்தலை முறியடித்தது. 30 கடத்தல் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுள்ளது அதில் அமன் ப்ரீத் சிங் அடங்குவார்.
குற்றம் சாட்டப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரும் தற்போது காவல்துறை காவலில் உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.