இலங்கை – உக்ரேன் பிரதி வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் உரையாடல்
அண்மைக்காலமாக இடம்பெற்ற முன்னேற்றங்கள் குறித்து பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர உக்ரேன் பிரதி வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதி வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மற்றும் உக்ரேன் பிரதி வெளிவிவகார அமைச்சரும் யுனெஸ்கோவிற்கான உக்ரேன் தேசிய ஆணைக்குழுவின் தலைவருமான மரியானா பெட்சாவுடன் 18-09-2025 அன்று தொலைபேசியில் முக்கிய விடயங்கள் குறித்து உரையாடியுள்ளார்.
இலங்கை மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து இருவருக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருவருக்கொருவர் அளித்த ஆதரவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக வெளிவிவகார, அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற முன்னேற்றங்கள் குறித்து பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர உக்ரேன் பிரதி வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டுவதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.





