நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டி நாமல் பதிவு
சிறையில் விளக்கமறியல் கூண்டின் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன்.
சிறையில் விளக்கமறியல் கூண்டின் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின்,'கஷ்டங்கள் சில மனிதர்களை உடைத்துவிடும், ஆனால் மற்றவர்களை உருவாக்கும். சவால்கள் தனது அரசியல் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், இன்னல்களை எதிர்கொள்ளும்போது மேலும் வலுவடைவதற்குத் தனது தந்தையே கற்றுக் கொடுத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்ட பேரணியில் கலந்துக் கொண்ட ஆதரவாளர்களுக்கு செய்தியை ஒன்றை அனுப்பி அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்கு தான் பணியப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தனது ஆதரவாளர்களின் ஒற்றுமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அநுராதபுர பேரணியானது பொதுஜன பெரமுனவின் அரசியல் இயக்கத்திற்கு ஒரு 'தீர்மானமிக்க புதிய தொடக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் விளக்கமறியல் கூண்டின் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின்,'கஷ்டங்கள் சில மனிதர்களை உடைத்துவிடும், ஆனால் மற்றவர்களை உருவாக்கும்' என்ற வார்த்தைகளைக் மேற்கோள் காட்டிய நாமர் ராஜபக்ஷ, சவால்கள் தனது அரசியல் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், இன்னல்களை எதிர்கொள்ளும்போது மேலும் வலுவடைவதற்குத் தனது தந்தையே கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வரிப் சுமை ஆகியவை சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள்,விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாகவும் உரிமை கோரியுள்ளார்.
அரசாங்கம் அரசு புலனாய்வு நிறுவனங்களை அரசியல்மயமாக்கியுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான முறையில் விசாரிக்கப்படவில்லை .இவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.
அரசாங்கத்தின் 'அரசியல் அதிகாரத்திற்கு' தான் அடிபணியப் போவதில்லை எதற்கும் அஞ்சப்போவதில்லை.நமது மன உறுதியை சிறையில் அடைக்க முடியாது ஆதரவாளர்களை அமைதியாகவும்,ஒழுக்கத்துடனும், சட்டத்திற்கு மதிப்பளித்தும் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





