ஜப்பானிய குழுவினருடன் ஜனாதிபதி செயலாளர் பேச்சு
இலங்கையில் ஜப்பானிய முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக இந்த ஜப்பானிய தூதுக் குழு வருகை தந்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் மற்றும் ஜப்பானிய வர்த்தக வாணிப மற்றும் கைத்தொழில் துறைப் பிரதிநிதிகள் குழு மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இலங்கையில் ஜப்பானிய முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக இந்த ஜப்பானிய தூதுக் குழு வருகை தந்துள்ளது. இலங்கையில் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்திய ஜப்பானிய தூதுக்குழு எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இது குறித்து ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின், வர்த்தகக் கொள்கைப் பணியகத்தின் தென்மேற்கு ஆசிய அலுவலகத்தின் பணிப்பாளர் தொஷியுகி ஷிமானோ, அதன் பிரதிப் பணிப்பாளர் ஹிரோமி சுமி, ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தென்மேற்கு ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதி டொயகஸு நகமுனெ உள்ளிட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள், ஜப்பான் வர்த்தக, வாணிப மற்றும் தொலிற்துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.