சர்வேதச புத்தக கண்காட்சியில் பாரபட்சம்
இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் நடத்தும் சர்வேதச புத்தகக் கண்காட்சியில் தமிழ் பதிப்பாளர்கள் மற்றும் தமிழ் புத்தக கடைகளுக்கு போதிய இடம் வழங்க நடவடிக்கை எடுப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் நடத்தப்படும் சர்வதேசப் புத்தக கண்காட்சியாக வளர்ந்து நாளாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் அறிவுத் திருவிழாவாக மாறியிருக்கிறது.
பாடநூல்கள் தொடக்கம் இலக்கிய நூல்கள் வரை பல்லாயிரக்கணக்கான நூல்களை வாங்க பலரும் திரண்டு வருகிறார்கள். ஒரே இடத்தில் தேவையான அனைத்தையும் பெறுவதற்கும் விலைக்கழிவுடன் பெறுவதற்குமான வாய்ப்பு கிடைக்கிறது.
அங்கே தமிழ்மொழி படைப்பாளர்கள் தமிழ் பதிப்பாளர்கள் தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.
அத்துடன் இவ்வாறான புத்தக கண்காட்சிகளில் தமிழ் பேசும் சிங்களப் பேசும் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. துரதிஷ்டவசமாக தமிழ் படைப்பாளர்களின் போதியளவு புத்தக கடைகள் இல்லாததால் கலந்து கொள்வதில்லை. நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் மக்கள் வருகிற ஒரு புத்தக கண்காட்சி. மகிழ்ச்சியான பண்பாட்டு நிகழ்வாக அமையவேண்டும்.
கடந்த 26 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிக்கல் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காகேவ இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். இத்தனைகால இந்த நிகழ்வு இலங்கையின் பண்பாட்டு ஒன்றுகூடலாகவும் பண்பாட்டு பரிவர்த்தனைக்குமான களமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிங்கள மொழியில் வருடாந்தம் சுமார் 8000 நூல்கள் வெளியாகின்றன. தமிழில் 500 க்கும் குறைவான நூல்களே வெளியாகி வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் நூல்களுக்கான சந்தை மிகச் சிறியது. அதுமட்டுமன்றி இங்கு வெளியாகும் நூல்கள் பல 300 பிரதிகள் மாத்திரமே பதிக்கப்படும் நிலையே தொடர்கிறது. அதைவிட குறைவாக பதிப்பிடப்படும் நூல்களும் உள்ளன. தேசிய தமிழ் நூல்கைள அரச பொது நூலகங்கள் கூட வாங்குவதில்லை. மிக சிலவற்றை விதிவிலக்காக கூறிவிடமுடியும்.
இத்தகைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் நூல்களின் மூலம் உழைத்தது கிடையாது. மாறாக தமது சொந்த பணத்தில் நூல்களை வெளியிட்டு வரும் நிலையே தொடர்கிறது.
இப்பேர்பட்ட நிலையில் நூலாக்கச் செலவில் மொழிபெயர்ப்புக்கும் மேலதிகமாக செலவிடமுடியாத நிலையின் காரணமாகேவ தமிழில் போதிய அளவு மொழிபெயர்ப்பு இந்தளவு நெருக்கடிகளுடன் தொடர்கிற தமிழ் பதிப்புப் பரப்பை பலப்படுத்த ஒரு ஒரு அமைப்பு கூட இல்லை. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளை நெருங்கப் போகிறது.
ஆனால் இதுவரை தமிழ் பதிப்பாளர்களை இணைத்துக்கொள்ள போதிய அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர்.
ஏற்பாட்டாளர்களில் தமிழ் பேசும் தமிழ்,முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவர்களின் குரல்கள் அங்கே ஒலித்திருக்கும். குறைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கக் கூடும்.