Breaking News
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது .
இதற்கமைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் தலைவர் உட்பட நிதியத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடி கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட பணிப்புக்கமைய இந்த இழப்பீட்டை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





