18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரையின் (2) ஆவது உப பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
குறித்த நியமனங்களுக்கான கடிதங்களை 03-09-2025 ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் கையளித்தார்.
விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரையின் (2) ஆவது உப பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்.கே.விதான,ஏ.எம்.ஐ.எஸ்.அத்தநாயக்க,ஏ.எம்.எம்.ரியால்,டீ.பி.முதுங்கொடுவ,எஸ்.பி.எச்.எம்.எஸ்.ஹேரத்,ஜே.கஜனிதீபாலன்,டி.எம்.டி.சி.பண்டார,எச்.எம்.பி.ஆர்.விஜேரத்ன,டி.எம்.ஏ.செனவிரத்ன,ஏ.ஆனந்தராஜா,ஜி.என்.பெரேரா,ஏ.ஜூடேசன்,கே.டி.எஸ்.வீரதுங்க,டி.ஆர்.வெலிகொடபிடிய,என்.வி.லங்காபுர,ஆர்.டி.திஸாநாயக்க,ஐ.எம்.ரிஸ்வி,ஏ.ஜெயலஷி டி சில்வா ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.





