காங்கேசன்துறை - தமிழக கடற்போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும்: ஜெயசேகரம்
கடந்த அரசுகள் இவற்றை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவேற்றும். இது தொடர்பாக நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் கூறுகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன் காங்கேசன்துறை - தமிழக கடற்போக்குவரத்து சேவை ஆகியவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
25-08-2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த அரசுகள் இவற்றை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவேற்றும். இது தொடர்பாக நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் கூறுகின்றேன்.
தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபை செய்யவேண்டிய விடயத்தை அது கண்டுகொள்ளாதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இவ்விடயம் குறித்துப் பேசி, அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.