மைத்திரியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென் ஹொங் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் 16-09-2025 இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து செல்ல முன்னர் சீனத் தூதுவர் அவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் அவர் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





