கற்பிட்டி கடலில் பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்பு
994 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் 13 433 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து 05-12-2025அன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கற்பிட்டி கடற்பரப்பில் 3 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு, ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பு தொடர்பில் 06-12-2025அன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட பொலழிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அஷோக தர்மசேன,
கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய சந்தேகநபர்கள் எவரும் இன்றி 3 போதைப்பொருள் பொதிகளுடன் மீன்பிடிப்படகொன்று கைப்பற்றப்பட்டது. பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக சுற்றிவளைப்புக்களின் அடிப்படையில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பொதியிடப்பட்ட நிலையில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 10 கிலோ கிராம் போதைப்பொருளும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் 63 கிலோ கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய 'முழு நாடும் ஒன்றாக' தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 35 855 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 268 ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதனுடன் தொடர்புடைய சுமார் 12 000 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 994 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் 13 433 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 944 சந்தேகநபர்கள் புனர்வாழ்வளிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1754 கிலோ கிராம் ஹெரோயின், 3535 கிலோ கிராம் ஐஸ், 15 975 கிலோ கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை விட அதிக தொகையாகும். இலங்கையை நோக்கி போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளமையால் எமது சுற்றிவளைப்புக்களையும் துரிதப்படுத்தியுள்ளோம் என்றார்.





