ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து மொஸ்கோவில் உயர்மட்ட சந்திப்பு
இருநாட்டு நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவதுடன் நட்புறவுக்குழுக்களை நிறுவும் நோக்கில் யுனைடெட் ரஷ்யா கட்சியின் தலைவர் விளாடிமிர் வஸிலியேவ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிதிநிதிகளையும் பிமல் ரத்நாயக்க சந்தித்துப் பேசினார்.
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
அதற்கமைய ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத்தலைவர் ஆன்ட்ரே டெனிஸோவை சந்தித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இருநாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று இருநாட்டு நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவதுடன் நட்புறவுக்குழுக்களை நிறுவும் நோக்கில் யுனைடெட் ரஷ்யா கட்சியின் தலைவர் விளாடிமிர் வஸிலியேவ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிதிநிதிகளையும் பிமல் ரத்நாயக்க சந்தித்துப் பேசினார்.
அதேவேளை வலுசக்தி துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு குறித்து ஆராயும் வகையில் ரஷ்ய வலுசக்தி பிரதியமைச்சர் ரோமன் மார்ஷவினை சந்தித்துக் கலந்துரையாடிய அவர், இலங்கைக்கு ரஷ்யா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்குத் தனது நன்றியையும் வெளிப்படுத்தினார்.
அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அதனை அடுத்த ஆண்டு கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.





