40 வருட வரலாற்றில் அதிக வெளிநாட்டு செலாவணி பதிவாகி சாதனை
2024ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணி அளவு 6575 மில்லியன் டொலராகும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வருட வரலாற்றில் 2025ஆம் ஆண்டு அதிக வெளிநாட்டு செலாவணி பதிவாகி சாதனை படைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான ஒரு வருட காலத்தில் 8076 அமெரிக்க டொலர் மில்லியன் எனும் 8.07 பில்லியன் டொலர் புலம்பெயர் தொழிலாளர்களின் அனுப்பப்படும் பணமாக நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியம் தெரிவித்துள்ளது. அது 2432 பில்லியன் ரூபா பெறுமதி என்பதுடன் 2024ஆஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 22.8வீத அதிகரிப்பாகும்.
2024ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணி அளவு 6575 மில்லியன் டொலராகும். அதேநேரம் ஒரு மாத காலத்தில் கிடைக்கப்பெற்ற அதிக அந்நிய செலாவணியாக கடந்த டிசம்பர் பதிவாகியுள்ளது. அது 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஆளும் அரசாங்கம் முன்னெடுத்த கொள்கை ரீதியிலான தீர்மானத்தின் பிரகாரம் உயர் தரத்தினால் ஆன பயிற்சியுடன் தொழிலாளர்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதற்கு பணியகம் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதன் பிரகாரம் கடந்த வருடம் 310,000 க்கும் அதிக இலங்கையகர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர் எனவும் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





