மாலைதீவுக்கு ஜனாதிபதி அநுர பயணித்த விமானத்தில் நாமல்
மாலைத்தீவுக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்ஷ அங்கு இடம்பெறவுள்ள தனிப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி பயணித்த விமானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பயணம் செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மாலைத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் வழக்கொன்றுக்கான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாலைத்தீவுக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்ஷ அங்கு இடம்பெறவுள்ள தனிப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி பயணித்த விமானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பயணம் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாட்டுக்கு திரும்புவார் என்றும் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றுக்கு மனுவொன்றை சமர்ப்பித்து முன்னிலையாகுவார் என்றும் அறிய முடிகிறது.