"உமா ஓயா" திட்டத்தை ஈரானிய ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்
உமா ஓயா பல்நோக்குக் கருத்திட்டமானது சிறிலங்காவிலுள்ள ஈரானிய நிறுவனங்களின் மாபெரும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளால் எதிர்காலத்தில் பல நீர் மற்றும் எரிசக்தி திட்டங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தியராப மற்றும் புஹூல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளையும் 25 கிலோமீற்றர் நீளமான நீர் பரிமாற்ற சுரங்கத்தையும் உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி முன்னிலையில் மே மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் ஒவ்வொன்றும் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் அடங்கும்.
உமா ஓயா பல்நோக்குக் கருத்திட்டமானது சிறிலங்காவிலுள்ள ஈரானிய நிறுவனங்களின் மாபெரும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இக்கருத்திட்டம் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
5000 ஏக்கர் விவசாய நிலத்தின் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கன மீட்டர் நீரை மாற்றுவதும், ஒரு வருடத்தில் 290 ஜிகாவாட்/மணி மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் திட்டத்தின் நோக்கமாகும்.





