ரில்வின் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுக்கு விஜயம்
இந்த விஜயத்தின் போது இக்குழு புதுடில்லி, குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பயணிக்கவுள்ளதுடன், அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்திய கலாசார உறவுக் குழுவின் அழைப்பிற்கமைய இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு 05-02-2026 அன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது இக்குழு புதுடில்லி, குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பயணிக்கவுள்ளதுடன், அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். மேலும் இந்தியாவின் விவசாய, தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உரித்தான மத்தியநிலையத்தையும் பார்வையிடவுள்ளனர்.
இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.





