Breaking News
லாக் டு போனெட் காட்டுத்தீயால் 1,000 பேர் வெளியேற்றம்
காயங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை. ஆனால் வெண்டிகோ கடற்கரைப் பகுதியைச் சுற்றிக் கட்டமைப்புகளின் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மனிடோபாவில் உள்ள லாக் டு போனெட் அருகே கட்டுக்கடங்காத காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை பிற்பகல் மற்றும் மாலை வரை தீவிரமடைந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காயங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை. ஆனால் வெண்டிகோ கடற்கரைப் பகுதியைச் சுற்றிக் கட்டமைப்புகளின் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் எரிந்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் தரையில் கிடந்தன. யாரும் திரும்பிச் செல்வதற்கு முன்பு அதை சரிசெய்ய வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.