ஜனாதிபதி ஊடகப்பிரிவில் 90பேர் பணியாற்றுகின்றனர்: முஜிபுர் எம்.பி
அரசாங்கத்திற்கு வாக்களித்த பொதுமக்கள், அவர்களின் முறையற்ற தீர்மானங்களால் விரக்தி அடைந்துள்ளனர். அத்தீர்மானங்களால் நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிய போது அவற்றை வெளியிட முடியாது என அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எவ்வாறெனினும் அறியகிடைத்த தகவலுக்கமைய சுமார் 90 பேர் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றுவதாக என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
அரசாங்கத்திற்கு வாக்களித்த பொதுமக்கள், அவர்களின் முறையற்ற தீர்மானங்களால் விரக்தி அடைந்துள்ளனர். அத்தீர்மானங்களால் நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை இல்லை என கூறிய தரப்பினரின் அரசாங்கம் தற்போது வெளிப்படைத் தன்மையின்றி செயற்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எமது தலைமைத்துவத்தை வலுவிழக்கச் செய்ய ஒரு சில சக்திகள் வெளியிலிருந்து செயல்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த அரசியல்வாதிகளே கட்சியின் தலைமைத்துவத்தை தாக்கும் வகையில் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது அமைச்சின் கீழ் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு புதிய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ காலத்தில், இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இறுதியில் சமர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையினபடி ஐக்கிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் காலத்து ஊழல் மோசடிகள் இடம் பெறவில்லையென தெள்ளத் தெளிவாக நிரூபனமாகியுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேகத்தில் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற அரசாங்கம், ஆறு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை இழந்துள்ளது. அரசாங்கத்தின் வாக்கு வாங்கி சரிந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அரசாங்கத்திற்கு வாக்களித்த பொதுமக்கள், அவர்களின் முறையற்ற தீர்மானங்களால் விரக்தி அடைந்துள்ளனர். அத்தீர்மானங்களால் நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை இல்லை என கூறிய தரப்பினரின் அரசாங்கம் தற்போது வெளிப்படைத் தன்மையின்றி செயற்படுகிறது. குறிப்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிய போது அவற்றை வெளியிட முடியாது என தெரிவித்தனர். எவ்வாறெனினும் எமக்கு அறியக்கிடைத்த தகவலுக்கமைய சுமார் 90 பேர் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றுகின்றனர்.
இதனாலேயே தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோதும் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. ஏனைய தரப்பினர்களுடன் ஒப்பிடும் போது வெளிப்படைத் தன்மை, புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் சமத்துவம் தொடர்பாக பேசியவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். ஒன்பது மதங்களுக்கிடையில் அரசாங்கத்தின் பார்வை மாறியுள்ளது ஊழல் குற்றச்சாட்டுகளை அனைவர் மீதும் முத்திரை குத்த ஆரம்பித்துள்ளனர் என்றார்.