ஆப்கானிஸ்தான் அகதியால் கத்தியால் குத்தப்பட்ட ஜெர்மன் காவல்துறை அதிகாரி பலி
சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், எக்ஸ் (முன்னர் ட்விட்டரில்) தளத்தில், தான் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகவும், "நம் அனைவரின் பாதுகாப்பிற்கான அதிகாரியின் அர்ப்பணிப்பு மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானது" என்றும் பதிவிட்டார்.

29 வயதான ஜேர்மன் காவல்துறை அதிகாரி ஒருவர் மேன்ஹெயிமில் (Mannheim) நடந்த கத்திக் குத்தால் ஏற்பட்ட காயங்களால் இறந்துவிட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய 25 வயது இளைஞரால் தலை மற்றும் கழுத்தில் பல முறை கத்தியால் குத்தப்பட்ட அந்த அதிகாரி, மே 31 அன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த அதிகாரி செயற்கை கோமாவில் காணப்பட்டார். ஆனால் ஜூன் 2 அன்று அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.
சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், எக்ஸ் (முன்னர் ட்விட்டரில்) தளத்தில், தான் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகவும், "நம் அனைவரின் பாதுகாப்பிற்கான அதிகாரியின் அர்ப்பணிப்பு மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானது" என்றும் பதிவிட்டார்.
சந்தேக குற்றவாளி மற்றொரு அதிகாரியால் சுடப்பட்டு காயமடைந்தார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு நீதிபதி அவரை கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார். சந்தேகக் குற்றவாளி விசாரிக்கப்படும் நிலையில் இல்லை என்று கூறி, தாக்குதலுக்கான காரணத்தைக் காவல்துறையினரும் வழக்குத் தொடுநர்களும் வழங்கவில்லை.