பத்தாண்டு காலத்திற்குள் சிறிலங்கா மீண்டும் திவால்நிலையை எதிர்கொள்ளும் அபாயம்: ஜனாதிபதி
நேறறு (ஆகஸ்ட் 13) மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் நாடும் அதன் மக்களும் சந்தித்த துரதிஷ்டமான காலகட்டத்தை எதிர்கொள்வதில் இருந்து எதிர்வரும் சந்ததியினர் காப்பாற்றப்படுவதை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நேறறு (ஆகஸ்ட் 13) மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார சவால்களைத் தீர்ப்பது கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு அப்பாற்பட்டது என்பதை எடுத்துக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, சரியான முடிவுகளால் வழிநடத்தப்படும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மூலோபாயத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒரு புதிய திட்டத்தை முன்முயற்சியுடன் பின்பற்றத் தவறினால், ஒரு தசாப்தத்திற்குள் நாடு மற்றொரு பொருளாதார தடையை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாமல் விளைவிப்பதாக அவர் எச்சரித்தார்.
---





