கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
நெடுந்தீவு அருகில் மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் 28-09-2025 அன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் 28-09-2025 அன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகில் மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் 28-09-2025 அன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு கடற்படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.





