Breaking News
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உரிமைகளை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – ஐ.நா.
பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தின் தேசிய நினைவுகூரலின் போது பேசிய பிரான்சே, மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் குறித்தும் திருப்தி தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு வெறுமனே ஒரு காட்சி அல்ல, கணிசமானதாக இருக்கும் என்று சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தின் தேசிய நினைவுகூரலின் போது பேசிய பிரான்சே, மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் குறித்தும் திருப்தி தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பன்னாட்டு மனித உரிமைகள் தினம் செவ்வாயன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் "எமது உரிமைகள், எமது எதிர்காலம், இப்போதையதே" என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.