பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்
புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் 25-08-2026அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஜார்ஜ் ஜெரால்டோ காட்ரி, சீன மக்கள் குடியரசின் தூதுவர் வெய் ஹுவாக்ஸியாங், ஆஸ்திரிய குடியரசின் தூதுவர் ரொபர்ட் ஜிஷ்க், அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், டொமினிகன் குடியரசின் தூதுவர் பிரான்சிஸ்கோ மானுவல் காம்ப்ரெஸ் ஹெர்னாண்டஸ், சூடான் குடியரசின் தூதுவர் பேராசிரியர் முகமது அப்துல்லா அலி எல்டோம், பனாமா குடியரசின் தூதுவர் நுபியேலா யனரித் அயலா ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
அதேபோல் பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் டி.எம். சலாவுதீன் மஹ்மூத், கானா குடியரசின் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் குவாசி ஒபிரி-டான்சோ,புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர் சிதி அர்னிஃபரிசா எம்டி ஜெயினி, கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர் தரம்குமார் சீராஜ் ஆகியோரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.





