மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியத்துக்கு 635 மில்லியன் ரூபா
பிரான்ஸிலிருந்தே அதிக தொகை வைப்பிடலிடப்பட்டுள்ளது. இதனை தவிர கனடா, அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளிடமிருந்தும் பெருமளவு தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியத்துக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்டவர்களால் இலங்கை வங்கி கணக்கிற்கு இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வைப்பிடலிடப்பட்டுள்ளதாக திறைசேரி செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.
34 670க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய வங்கியால் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு கணக்குகளிலும் பணத்தை வைப்பிலிட முடியும். இந்த கணக்குகளின் ஊடாக எமக்கு சுமார் 61 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. அதற்கமைய மொத்தமாக 697.476 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை கிடைத்துள்ளது.
பிரான்ஸிலிருந்தே அதிக தொகை வைப்பிடலிடப்பட்டுள்ளது. இதனை தவிர கனடா, அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளிடமிருந்தும் பெருமளவு தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதேபோன்று சுமார் 33 நாடுகளிடமிருந்து இந்த தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது. நாளொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாவையும் விட அதிக தொகையை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வைப்பிலிட்டுள்ளனர்.
உலக வங்கியின் தலையீட்டுடன் இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் உடனடி சேத மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்குள் முதற்கட்ட அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக திறைசேரி செயலாளர் மேலும் தெரிவித்தார்.





