ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை நிராகரிப்பு - வைத்தியசாலையில் அனுமதி
160 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தை வாங்குவதற்கே நிதி திரட்டப்பட்டதாகவும் வாதங்களை முன்வைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
'சிரிலிய சவிய' அமைப்பின் நிதி முறைகேடுகள் தொடர்பில் நிதிப்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலேயே அவர் இந்த முன்பிணை மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இம்மனு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிதிப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திம வீரக்கொடியிடம்6மணிநேரம் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கையிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மனுமீதான விசாரணையின் போது நீதிவான் முன் பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
இதேவேளை, 'சிரிலிய சவிய' நிதி முறைகேடு தொடர்பான பிறிதொரு விசாரணையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று 13ஆம் திகதி வரை ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரிஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 'சிரிலிய சவிய' அமைப்பின் கணக்கிற்கு 10 மில்லியன் ரூபா பெறப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த நிதி வங்கிக் கணக்கில் இன்னமும் பாதுகாப்பாக உள்ளதாகவும், 160 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தை வாங்குவதற்கே நிதி திரட்டப்பட்டதாகவும் வாதங்களை முன்வைத்தனர்.
எனினும், பொதுச் சொத்துச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையிலும், கைதை தவிர்க்க தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையிலும், தற்போது விளக்கமறியலில் இருக்கும் ஷிரந்தி ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





