அமெரிக்க கடற்படையணியின் 251ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வுகள்
கொழும்பிலுள்ள எமது தூதரகத்தைப் பாதுகாக்கும் கடற்படைப் பாதுகாப்புப் பிரிவினரும் அந்தப் பெருமைமிக்க பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.' எனப் பாராட்டினார்.
அமெரிக்க கடற்படையணியின் 251 ஆவது பிறந்தநாள் நிகழ்வு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த வருடாந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வுபெற்ற), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற) உள்ளிட்ட இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா தனது 250 ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், தேசத்தை விடப் பழமையான வரலாற்றைக் கொண்ட கடற்படையணியின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
இங்கு உரையாற்றிய தூதுவர் எரிக் மேயர், 'தலைமுறை தலைமுறையாக எமது தேசத்தைப் பாதுகாப்பதில் கடற்படையினர் அசாதாரணமான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளனர். கொழும்பிலுள்ள எமது தூதரகத்தைப் பாதுகாக்கும் கடற்படைப் பாதுகாப்புப் பிரிவினரும் அந்தப் பெருமைமிக்க பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.' எனப் பாராட்டினார்.
முதலாவது கடற்படைத் தளவாடக் குழுவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஒமர் ஜே. ரண்டால் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுபவங்களைக் கடத்துவதை அடையாளப்படுத்தும் பாரம்பரிய பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.





