நாட்டில் வேலையின்மை வீதம் 4.0 சதவீதமாக உயர்வு; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம்
இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை வீதம் 17.8ஆக காணப்படுகிறது.
நாட்டில் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான தொழிலாளர் படையின் பங்களிப்பு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 50 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3,40,240 ஆக உயர்வடைந்துள்ளது.நாட்டில் வேலையின்மை வீதம் 4.0 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான ஊழியப்படை தொடர்பான அறிக்கையை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் மொத்த வேலையின்மை வீதம் 4.0 சதவீதமாக பதிவாகியுள்ளது.இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறியளவிலான மாற்றத்தை குறிக்கிறது.
நாட்டில் 82.4 இலட்சம் பேர் தொழில் புரிகின்ற நிலையில் அவற்றில் சேவைத்துறையில் 49.2 சதவீதமானோர்,கைத்தொழில் துறையில் 27.2 சதவீதமானோர், விவசாயத்துறையில் 23.4 சதவீதமானோர் ஈடுபடுகின்றனர்.சேவை மற்றும் கைத்தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை வீதம் 17.8ஆக காணப்படுகிறது.இதற்கமைய நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3,40,240 ஆக உயர்வடைந்துள்ளது.நாட்டின் வேலையின்மை வீதம் 4.0 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
பொருளாதார ரீதியில் 8,58,286 பேர் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பற்றவர்களாக காணப்படுகின்றனர்.இதில் மாணவர்கள், முதியோர்கள், வீட்டு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள், நோயாளிகள்,முழு நேர மாணவர்கள், ஓய்வுப்பெற்றவர்கள் ஆகியோர் அடங்குகிறார்கள்.இவர்கள் வேலையில்லாதவர்கள் என்ற தொகுதிக்குள் உள்ளடங்கமாட்டார்கள்.





