Breaking News
சந்திம வீரக்கொடியிடம் 6 மணிநேரம் விசாரணை
விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முன்னாள் பிரதி சபாநாயகருமான அமைச்சருமான சந்திம வீரக்கொடி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் 12-10-2026அன்று ஆஜராகியிருந்த நிலையில், ஆறு மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையொன்றுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்களை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





