சிறையில் நானும் நாமலும் நன்றாக உறங்குகின்றோம்: சாமர சம்பத் எம்.பி.
நானும், நாமல் ராஜபக்ஷம் சிறையில் நன்றாக உறங்குகிறோம்.எங்களுக்கு போர்வை ஒன்று போதும் .
நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார வரவு, செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டு உறக்கமில்லாமல் இருக்கிறார். நானும், நாமல் ராஜபக்ஷம் சிறையில் நன்றாக உறங்குகிறோம்.எங்களுக்கு போர்வை ஒன்று போதுமென புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டு ஜனாதிபதி ஒட்டுமொத்த மக்களாலும் இன்று விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். ஏதும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்;டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்காமல் இருந்திருக்கலாம்.
வரவு, செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் நடுத்தர மக்களுக்கு என்ன தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான ஏதேனும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதா ?
பொருளாதாரத்தை முன்னேற்ற விட்டோம், திறைசேரி நிரம்பி வழிகிறது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் நகை அடகுக்கடை முன்பாக நிற்கிறார்கள். உண்மையில் நகை கடையில் கூட்டம் தான் நிரம்பியுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.இது தான் இன்றைய யதார்த்தம்.
நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டு உறக்கமில்லாமல் இருக்கிறார்.நானும், நாமல் ராஜபக்ஷம் சிறையில் நன்றாக உறங்குகிறோம்.எங்களுக்கு போர்வை ஒன்று போதும் .
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சபைக்கு வந்துள்ளார்கள். ஆணைக்குழு பற்றி நான் ஏதும் சொல்ல போவதில்லை. நான் ஏதேனும் சொன்னால் எனக்கு எதிராக புதிய வழக்கை தாக்கல் செய்வார்கள். ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் சிறையில் உள்ளேன்.ஆகவே ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றார்.





