ரணிலுக்கு எதிரான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக டிசம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
சந்தேகநபர்களான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு விஜயம் செய்தமை ரணிலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக டிசம்பர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (11) கோட்டை பதில் நீதிவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்களான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
166 இலட்சம் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு விஜயம் செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.





