ஷானி , ரவி அருட்தந்தை சிரில் ஆகியேருக்கு எதிரான மனு தள்ளுபடி
அக்கூற்றிலுள்ள விடயங்களால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மட்டுமன்றி உயர் நீதிமன்றத்திற்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிபாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிரில் காமினி ஆகியேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி இரு மனுவையும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தரான சாந்த ஜயதிலக்க தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் 28-09-2026 அன்று பிரதம நீதியரசர் ப்ரீதிபத்மன் சூரசேன, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் அர்ஜீன ஒபேசெக்கர ஆகிய மூவரடங்கிய நீதியரசர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது மனுதாரரான சாந்த ஜயதிலக்க மன்றில் வி்டயங்களை முன்வைக்கையில், “ அருட்தந்தை சிரில் காமினியால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளன. அம்முறைப்பாட்டில் அசாத் மௌலானா வெளிப்படுத்திய விடயத்தின் ஒருபகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வெளிபடுத்தல் தனக்கு மின்னஞ்சல் மூலமாக கிடைத்ததாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அக்கூற்றிலுள்ள விடயங்களால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மட்டுமன்றி உயர் நீதிமன்றத்திற்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
அச்சந்தர்ப்பத்தில், பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மனுதாரரிடம் கேள்வியெழுப்புகையில், ” அருட்தந்தை சிறில் காமினி கூற்றினால் நீதிமன்றத்திற்கு எவ்வாறு அவமதிப்பு ஏற்படும்?" எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர், " கணம் நீதியரசர் அவர்களே! அருட்தந்தை சிறில் காமினியின் முறைப்பாட்டில் அசாத் மௌலானா என்பவரின் வெளிப்படுத்தலின் ஒருபகுதி உள்ளடங்கியுள்ளது. அது தனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கூற்றின் மூலம் நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.





