இலங்கை இராணுவத்தின் 69ஆவது பிரதானி நியமனம்
மாத்தறை புனித சர்வேஸஸ் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி. பிரேமரத்ன, நீண்ட இராணுவ அனுபவம் கொண்ட ஒரு மூத்த அதிகாரி ஆவார்.
இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக, இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி. பிரேமரத்ன இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் மிக உயரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி.பிரேமரத்ன மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்தார். அதனைத் தொடர்ந்து, தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டு, உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
மாத்தறை புனித சர்வேஸஸ் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி. பிரேமரத்ன, நீண்ட இராணுவ அனுபவம் கொண்ட ஒரு மூத்த அதிகாரி ஆவார். இந்த உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, அவர் இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றியதுடன், தற்போதும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் படைத் தளபதியாகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





