இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய சட்டம்: ஆஸ்திரேலியா நிறைவேற்றியது
பசுமைக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம், குறிப்பாக குழந்தைகள் உள்ளிட்ட இணையப் பயனாளர்களை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணையவழி தீங்குகளை முன்கூட்டியே தடுப்பதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்க வகை செய்யும் 'டிஜிட்டல் டியூட்டி ஆஃப் கேர் சட்டத்தை' ஆஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது.
செயலிகள், செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்புத் தரங்களை இந்தச் சட்டம் நிர்ணயிக்கிறது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம்.
பசுமைக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம், குறிப்பாக குழந்தைகள் உள்ளிட்ட இணையப் பயனாளர்களை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட விமர்சகர்கள், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகப்படியான சட்ட இணக்கச் செலவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். இதனால், இணையத் தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.





