அநுரவின் நடவடிக்கையால் வெட்கமடைகின்றோம்: தயாசிறி எம்.பி.
அனர்த்த சேதத்துக்கு செலவழிக் தற்போது 500 பில்லியன் ரூபா அனுமதித்துக்கொண்டுள்ளோம். அத்துடன் 1860 பில்லியன் ரூபா இழப்புகளுக்காக வரும் பணத்தை தனது நண்பர்களுக்கு கொள்ளையடிக்குவகையில் இடம் அமைத்துக்கொடுக்கும் வகையிலே இந்த வேலைத்திட்டத்தை தயாரித்திருக்கிறார்.
தித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகளுக்காக வரும் பணத்தை தனது நண்பர்களுக்கு கொள்ளையடிக்க இடமளித்து, அதுதொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளை தனக்கு விருப்பமான முறையில் மாற்றியமைக்கவே ஜனாதிபதி தனக்கு சார்ப்பான ஒருவரை கணக்காய்வாளராக நியமித்துக்கொள்ள முயற்சித்து வருகிறார். ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெட்கப்படுகிறோமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் 24-12-2025அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாகி 8மாதங்கள் கடந்தும் அதற்கு தகுதியான ஒருவரை பரிந்துரை செய்ய ஜனாதிபதிக்கு முடியாமல் போயிருக்கிறது. பதவியில் இருக்கும் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெறும்போது, கணக்காய்வாளர் திணைக்களத்தில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினரே அடுத்தாக இந்த இடத்துக்கு நியமிக்கப்படுகிறார். கடந்த கால அரசாங்கத்தின் தலைவர்களும் அந்த நடைமுறையே பின்பற்றி வந்திருக்கிறார்கள். இந்த விடயத்தில் யாரும் தலையிடவில்லை.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு 3பேரை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார். அந்த 3பேரும் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஜனாதிபதியின் பல்கழைக்க நண்பர். அவருக்கும் இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லை. அடுத்ததாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ஒருவர். அவரும் நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். அவருக்கு இந்த துறையில் 10 மாத அனுபவமே இருந்திருக்கிறது. அதனால் கணக்காய்வாளர் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்து அனுப்பிய 3பேரும் எந்த தகுதியும் இல்லாதவர்கள்.
தித்வா புயலால் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவின் பெறுமதி 1860 பி்ல்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு செலவழிப்பதற்காக அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணை மூலம் 500 பில்லியன் ரூபா அனுமதித்துக்கொண்டுள்ளது. தற்போது இந்த பணத்தை செலவழிக்கும்போது கட்டாயமாக இருக்கவேண்டிய ஒருவர்தான் நிலையான கணக்காய்வாளர். ஆனால் கணக்காய்வாளர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை தடை போடக்கூடாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவை சுயாதீன குழுவாகும். அதில் சிவில் பிரஜைகள் 3பேர் இருக்கிறார்கள். அவர்களின் காலம் ஜனவரி 3ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அந்த இடத்துக்கு தங்களுக்கு தேவையான 3பேரை நியமித்துக்கொண்டு, அதன் பின்னர் ஜனாதிபதி தனக்கு தேவையான கணக்காளர் ஒருவரை நியமித்துக்கொள்ள தற்போது முயற்சித்து வருகிறார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து உண்மையில் வெட்கப்படுகிறோம்.
அநுரகுமாரவும் நானும் பல வருடங்கள் கோப் குழுவில் இருந்திருக்கிறோம். அங்கு இந்த நாட்டின் பில்லியன் கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். அவ்வாறான ஒரு திருட்டுத்தனத்துக்கு உதவி செய்யவே தற்போது அநுரகுமார தி சாநாயக்கவும் முயற்சிக்கிறார்.
ஏனெனில் அனர்த்த சேதத்துக்கு செலவழிக் தற்போது 500 பில்லியன் ரூபா அனுமதித்துக்கொண்டுள்ளோம். அத்துடன் 1860 பில்லியன் ரூபா இழப்புகளுக்காக வரும் பணத்தை தனது நண்பர்களுக்கு கொள்ளையடிக்குவகையில் இடம் அமைத்துக்கொடுக்கும் வகையிலே இந்த வேலைத்திட்டத்தை தயாரித்திருக்கிறார்.
அதனால் இந்த பணம் செவழிக்கப்படும் முறை தொடர்பில் தேடிப்பார்க்கும் சுயாதீன கணக்காய்வாளர் ஒருவர் இருப்பது அவருக்கு பிரச்சினையாக இருக்கிறது. எனவே ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவரை கணக்காய்வாளராக நியமித்துக்கொண்டு, தனக்கு விரும்பமான முறையில் கணக்காய்வுகளை மாற்றவே முயற்சிக்கிறார். திருடர்களை கண்டுபிப்பதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தற்போது திருடர்களை தனது ஆட்சியில் பாதுகாக்க முயற்சிப்பதையிட்டு வெட்கப்படுகிறோம். அதனால் சுயாதீன கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கும் இந்த நடவடிக்கையில் தலையீடு மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





