ஐ.நா உயர்ஸ்தானிகரின் பதவிக் காலம் நீடிப்பு - வாக்களிப்பில் இலங்கை நடுநிலை
சீனா உள்ளிட்ட 144 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, வோல்கர் டேர்க்கின் பதவிக்காலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் பதவிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக ஐ.நா.பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 167 நாடுகள் பங்கேற்ற நிலையில் இலங்கை உட்பட 13 நாடுகள் நடுநிலை வகித்தன. பெலாரஸ், டொமினிகன் குடியரசு, ஈக்வடார், கயானா, ஈராக், நியூசிலாந்து, பராகுவே, பெரு, தென் கொரியா, தெற்கு சூடான், சுரிநாம் மற்றும் உகாண்டா ஆகியவையே நடுநிலை வகித்த ஏனைய நாடுகளாகும்.
அதேவேளை, அர்ஜென்டீனா, புர்கினா பாசோ, வடகொரியா, இஸ்ரேல், மாலி, நிகரகுவா, நைஜர், ரஷ்யக்கூட்டமைப்பு, டிரினிடாட் டொபாகோ, அமெரிக்கா ஆகிய 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
சீனா உள்ளிட்ட 144 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, வோல்கர் டேர்க்கின் பதவிக்காலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் பதவியைப் பொறுப்பேற்றவர், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுத்து ஓராண்டுக்குள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





