மண்சரிவு அபாயம்; மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது வதிவிடங்களிலிருந்து வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டிய குடும்பங்களை அடையாளங் கண்டு மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டம், பயனாளியால் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறைக்கமைய அமல்படுத்தப்படுகின்றது.
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது வதிவிடங்களிலிருந்து வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டிய குடும்பங்களை அடையாளங் கண்டு மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டம், பயனாளியால் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறைக்கமைய அமல்படுத்தப்படுகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக உயர்ந்தபட்சம் 1.6 மில்லியன் ரூபா அடையாளங் காணப்படுகின்ற குடும்பமொன்றுக்கு வழங்கப்படுவதுடன், இத்தொகையை வீடொன்றுக்கு 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.