Breaking News
அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும்
உளவுத்துறை மதிப்பீடுகள் அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்களில் அதிகரித்த அச்சுறுத்தல் வாயப்பைச் சுட்டிக்காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கக்கூடும். இது வார இறுதியில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் மோதலை இன்னும் தீவிரப்படுத்தும்.
டிரம்ப் நிர்வாகம் மேலதிக மோதலைத் தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்கின்ற அதேவேளையில், பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள், செய்தி நிறுவனமான ராய்ட்டர்சிடம் பேசுகையில், உளவுத்துறை மதிப்பீடுகள் அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்களில் அதிகரித்த அச்சுறுத்தல் வாயப்பைச் சுட்டிக்காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.





