கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் வடக்குக்கு இருநாள் விஜயம்
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிலவிவரும் காணி அபகரிப்பு நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காணி மீட்பு தொடர்பான கள விஜயத்தை மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகள் தொடர்பான விடயங்களும், அவற்றை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களும் வடமாகாண மக்களுடன் பகிரப்பட்டன.
அதேபோன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிலவிவரும் காணி அபகரிப்பு நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் காணி பிரச்சினைகளுக்கு இணைந்த முறையில் செயற்படவேண்டிய அவசியத்தை மக்கள் வலியுறுத்தினர். அத்தோடு காணி மீட்பிற்காக வடக்கு, கிழக்கு இணைந்த புதிய வலையமைப்பொன்றும் உருவாக்கப்பட்டது.





