சீரற்ற காலநிலையால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறுகிய காலத்துக்குள் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கை ஆகிய கங்கைகளை அண்மித்த பகுதிகளுக்கு நீர்பாசனத் திணைக்களம் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு இரண்டாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை கருத்திற்கொண்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் பலத்த மழை பெய்கின்ற நிலையில் நேற்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் அதிகளான மழைவீழ்ச்சி நுவரெரலியா மாவட்டத்தின் கெனியோன் பகுதியில் 191 மி.மி ஆக பதிவாகியுள்ளது.
களுகங்கையை அண்மித்த உடுநுவர,உடபலாத்த, யட்டிநுவர,கங்கை,ஹல கோரளை, பஸ்பாகே கோரளை கங்க வட்ட, கோரளை,ஹாரிஸ்பத்துவ,பாததும்பர,தொலுவ,கொத்மலை, பஸ்பாகே, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்குப் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மேலும் அதிக தீவிரம் கொண்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால்இ இது நதியின் நீர்மட்டங்களில் விரைவான மற்றும் சடுதியான அதிகரிப்பு ஏற்படக்கூடும். அதேபோல மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு கண்டி கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது டன்,இரத்தினபுரி மாவட்டத்துக்கு இரண்டாம் கட்ட செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
வீதிகளில் மண் மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில் கடுகண்ணாவ பகுதியிள் பிரதான பாதை நேற்று மாலை 03 மணியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டதுடன், ஏனைய பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.
தித்வா புயல் தாக்கத்தின்போது மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அவதானநிலை காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு,கொழும்பு,களுத்துறை,காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கரையோரக் கடலில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மறு அறிவித்தல் வரை அமலில் இருக்கும். காலநிலை அவதான நிலையத் தரவுகளுக்கு அமைவாக கடலின் நிலைமை சீரடைந்தவுடன் இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் காலநிலை அறிவித்தல்களைப் பொருட்படுத்தாமல் கடலுக்குச் சென்ற மன்னார், கற்பிட்டி, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து (05) மீனவர்கள் உயிரிழந்தமை குறித்து கவலைக்குரியது. மீனவர்களின் பாதுகாப்பிற்காக வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும், எந்தவொரு பகுதியில் தொழிலில் ஈடுபடும்போதும் கண்டிப்பாக பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொள்ள திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை இன்றைய தினம் காலநிலை வழமைக்குத் திரும்பும் எனவும் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பின்னர் மழை வீழ்ச்சி அதிகரிக்க கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.





